திருமண நாளைக் கொண்டாடிய விராட் - அனுஷ்கா தம்பதி!

Updated: Sat, Dec 11 2021 21:35 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விராட் கோலி, பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை கடந்த 2017 ஆம் ஆண்டு இதே டிசம்பர் 11ஆம் தேதி இத்தாலியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் தற்போது நான்கு ஆண்டுகளாக இணைந்து சந்தோஷமாக காலத்தை கழித்து வரும் இந்த ஜோடிக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. 

இந்நிலையில் இன்று தங்களது நான்காம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. தனது திருமண நாளை நினைவு கூறும் வகையில் அவரது மனைவிக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் பகிர்ந்து அதில் தனது குழந்தை வாமிகாவுடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 

இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரத்திலேயே இணையத்தில் வைரலாகியது மட்டுமின்றி லைக்ஸ்களை அல்லி வருகிறது. மேலும் தனது மனைவி குறித்து அவர் பதிவிட்டதாவது, “இந்த நான்கு ஆண்டுகளாக எனது மொக்கையான ஜோக்குகளையும், எனது சோம்பேறித்தனத்தையும் கையாண்டு உள்ளீர்கள். கடவுள் நமக்கு கொடுத்துள்ள ஆசீர்வாதம் இந்த நான்கு ஆண்டுகள். நேர்மையான, அன்பான, துணிச்சலான பெண்ணை மணந்து கொண்டு நான்கு ஆண்டுகளாகி உள்ளது.

உலகமே நமக்கு எதிராக நின்றாலும் எது சரியோ அந்த பக்கம் நிற்க எனக்கு உத்வேகம் கொடுத்தவர். நான் என்றென்றும் உங்களை காதலிப்பேன். உங்கள் மீதான காதல் எனக்கு கூடிக் கொண்டேதான் இருக்கும். இந்த நாள் மிகவும் இனிமையான நாள். ஒரு குடும்பமாக நமது முதல் திருமண நாள் இது. வாமிகாவினால் வாழ்வே நிறைவடைந்துள்ளது” என கோலி தெரிவித்துள்ளார்

விராட் கோலி வெளியிட்ட இந்த பதிவு தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::