ஓரே இன்னிங்ஸில் 13 நோல்பால்கள் வீசிய பும்ரா; விளக்கமளித்த ஜாகீர் கான்!

Updated: Mon, Aug 16 2021 12:22 IST
Image Source: Google

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 364 ரன்கள் குவித்தது. அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 391 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சார்பாக சிராஜ் 4 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், இசாந்த் சர்மா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார்.

ஆனால் முதல் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஒரு விக்கெட்டுக்கு கூட வீழ்த்தவில்லை. இந்த போட்டியில் 26 ஓவர்கள் வீசி அவர் 79 ரன்களையும் விட்டுக் கொடுத்தார். அதுமட்டுமின்றி இந்த இன்னிங்சில் இந்திய அணி வீசிய 17 நோ பால்களில் 13 நோ பால்களை பும்ரா வீசி இருந்தார்.

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முக்கியமான கட்டத்தில் நோபால் வீசும் பழக்கமுடைய பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நோ பால்களை வீசியுள்ளது ரசிகர்களிடையே கடும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போட்டியின் மூன்றாம் நாளில் 13 நோ பால்களை பும்ரா வீச காரணம் என்ன என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், மும்பை அணியின் பந்துவீச்சு ஆலோசகருமான ஜாகீர் கான் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜாகீர் கான்,  “பும்ரா இந்த இன்னிங்சில் விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்ற காரணத்தினாலேயே பவுலிங் ரன்னப்பில் கூடுதல் வேகமும், க்ரீசில் கால்வைக்கும் போது சற்று அழுத்தமான புஷ்ஷையும்யும் கொடுத்தார். இதன் காரணமாகவே அவர் நோ பால் வீசுகிறார் என்று நினைக்கிறேன். அதே போன்று அவர் ஏன் நோபால் வீசுகிறார் என்பதை தெளிவுபடுத்துதல் மிகவும் சிக்கலானது.

ஏனெனில் வேகப்பந்து வீச்சாளராக அவரது ரன்னப் மட்டுமே அவரது பவுலிங் லைன், ரிதம் ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியமானது. ஆனால் ஒரு பந்து வீச்சாளராக அவர் விக்கெட் எடுக்காத போது அவர் கூடுதலான அழுத்தத்தையும், வேகத்தையும் தனது பந்துவீச்சில் அளிக்க நினைத்ததே இந்த நோ பால்களுக்கு காரணம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை