ஃபேப் ஃபோர் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்த ஜாகீர் கான்!

Updated: Sun, Sep 29 2024 10:10 IST
Image Source: Google

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாள ஜாகீர் கான். இவர் இந்திய அணிக்காக கடந்த 2000ஆம் ஆண்டு அறிமுகமாகி, 2014ஆம் ஆண்டு வரை விளையாடினார். அதன்பின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த அவர் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளர்களில் ஒருவராக இருந்து வந்தார். இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக ஜாகீர் கான் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய அணிக்காக இதுவரை 92 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஜாகீர் கான் 311 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 போட்டிகளில் விளையாடி 282 விக்கெட்டுகளையும், 17 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேற்கொண்டு ஐபிஎல் தொடரில் 2008 முதல் 2017ஆம் ஆண்டு வரை விளையாடிய ஜாகீர் கான் 100 போட்டிகளில் விளையாடி 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நவீன கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை இந்திய ஜாம்பவான் ஜாகீர் கான் தேர்ந்தெடுத்து அறிவித்துள்ளார். அதில் முதலாவதாக இந்திய அணியின் தற்போதைய நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்பிரித் பும்ராவை அவர் சிறந்த பந்துவீச்சாளர் என்று அறிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து முகமது ஷமி, தென் ஆப்பிரிக்காவின் காகிசோ ரபாடா, ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட், பாட் கம்மின்ஸையும் அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், "இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது மற்றும் இரண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தியா அனைத்து நிலைகளிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனவே,எனது ஃபேப் ஃபோர் பந்துவீச்சாளர்களில் நான் நிச்சயமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது ஷமி ஆகியோரை தேர்வு செய்வேன். இவர்களைத் தவிர தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அதில் இருப்பார்கள்.

Also Read: Funding To Save Test Cricket

பேட் கம்மின்ஸ் இந்த பட்டியலில் இணையக்கூடிய ஒரு சிறப்பான வீரர். எனவே இவர்கள்தான் இப்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய டாப் 4 அல்லது 5 பந்துவீச்சாளர்கள். மேலும் கௌதம் கம்பீரைப் பற்றி  பேசும்போது, ​​அவரது வெற்றியின் பசி தெளிவாகத் தெரியும், மேலும் அவர் கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமுள்ளவர். இந்த குணங்கள்தான் அவரை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியது, மேலும் அவர் ஒரு வீரரைப் போலவே விளையாட்டையும் அணுகுவார்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை