Zim Afro T10 : ஜோபர்க்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது டர்பன்!

Updated: Sat, Jul 29 2023 23:07 IST
Image Source: Google

டி20 கிரிக்கெட் வடிவத்தில் இருந்து தோன்றிய டி10 கிரிக்கெட் வடிவம் டி20 கிரிக்கெட் செல்லாத நாடுகளுக்கும் சென்றதோடு இல்லாமல், எதிர்காலத்தில் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான வாய்ப்புகளையும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டில் டி10 கிரிக்கெட் தொடர் ஐந்து அணிகளை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. இதில் மூன்று அணிகள் தென் ஆப்பிரிக்க அணிகள் இரண்டு அணிகள் ஜிம்பாப்வே அணிகள்.

இத்தொடரில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் டர்பன் களந்தர்ஸ், ஜோபர்க் பஃபல்லோஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டர்பன் கலந்தர்ஸ் அணி முத்லில் பந்துவீசுவதாக தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய ஜோபர்க் அணிக்கு முகமது ஹபீஸ் - டாம் பாண்டன் இணை அதிரடியான தொடக்கத்தை கொடுத்தனர். இதில் ஹபீஸ் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வில் ஸ்மீதுட்ம் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான டாம் பாண்டனும் 36 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் யுசுஃப் பதான் 25 ரன்களையும், ரவி போபாரா 22 ரன்களையும் சேர்க்க 10 ஓவர்கள் முடிவில் ஜோபர்க் அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 127 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய கலந்தர்ஸ் அணிக்கு ஹஸ்ரதுல்லா ஸஸாய் - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்தனர். 

இதில் செய்ஃபெர்ட் 30 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ஆண்ட்ரே ஃபிளட்செர் 29 ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் பின்னர் ஜோடி சேர்ந்த ஸஸாய் - ஆசிஃப் அலி இணை இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் டர்பன் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜோபர்க் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், கோப்பையையும் வென்று அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை