ZIM vs BAN, 3rd ODI: ஜிம்பாப்வேவை வீழ்த்தி ஒயிட்வாஷை தவிர்த்தது வங்கதேசம்!

Updated: Wed, Aug 10 2022 19:51 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவியில் சுற்றுப்பயணம் செய்துவரும் வங்கதேச அணி 3 போட்டிகளைக் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடந்துமுடிந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியது.

அதன்பின் நடைபெற்ற முதலிரண்டு ஒருநாள் போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணி வெற்றிபெற்று 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 19 ரன்களிலும், நஜ்முல் ஹொசைன், முஷ்பிக்கூர் ரஹிம் ஆகியோர் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

மறுமுனையில் சிறப்பாக விளையாடிய வந்த மற்றொரு தொடக்க வீரர் அனமுல் ஹக் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹ்மதுல்லா 39 ரன்களில் விக்கெட்டை இழந்ததுன், 76 ரன்களைச் சேர்த்திருந்த அனமுல் ஹக்கும் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய அஃபிஃப் ஹொசைன் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதத்தையும் பதிவுசெய்தார். இதனால் 50 ஓவர்கள்ள் மிடுடிவில் வங்கதேச அணி 9 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்களைச் சேர்த்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அஃபிஃப் ஹொசைன் 85 ரன்களைச் சேர்த்தார்.

இதையடுத்து இலக்கை துரத்திய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் கைடானோ, மருமாணி ஆகியோர் ஆரம்பத்திலேயே சோற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இன்னெசெண்ட் கையா 10 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெஸ்லி மாதவெரே, சிக்கந்தர் ரஸா ஆகியோரும் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் எதிரணி பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை. இறுதியில் 10ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ரிச்சர்ட் 36 ரன்களையும், 11ஆவது விக்கெட்டாக களமிறங்கிய விக்டர் நயுச்சி 26 ரன்கலையும் எடுத்தனர்.

இதனால் 32.2 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி தரப்பில் முஷ்தபிசூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

இதன்மூலம் வங்கதேச அணி 105 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இருப்பினும் ஜிம்பாப்வே அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை