ZIM vs IND, 1st ODI: தவான், கில் அதிரடியில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது இந்தியா!

Updated: Thu, Aug 18 2022 18:37 IST
Image Source: Google

இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய மெயின் அணி ஆசிய கோப்பையில் ஆடுவதற்கு தயாராகிவருவதால், கேஎல் ராகுல் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தான் ஜிம்பாப்வே தொடரில் ஆடுகிறது.

ஹராரேவில் இன்று நடந்துவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியின் டாப் 3 வீரர்களையுமே ஒற்றை இலக்கத்தில் வீழ்த்தி அசத்தீனார் தீபக் சாஹர். 4ம் வரிசையில் இறங்கிய சீன் வில்லியம்ஸை ஒரு ரன்னில் முகமது சிராஜ் வீழ்த்த, சிக்கந்தர் ராஜாவை 12 ரன்னில் பிரசித் கிருஷ்ணாவும் வீழ்த்தினார். 

பொறுப்புடன் ஆடி 35 ரன்கள் அடித்த கேப்டன் சகாப்வாவை அக்ஸர் படேல் வீழ்த்த, 110 ரன்களுக்கு ஜிம்பாப்வே அணி 8 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஆனால் 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜிம்பாப்வே அணியின் டெய்லெண்டர்களான இவான்ஸ் மற்றும் ரிச்சர்டு ஆகிய இருவரும் இணைந்து இந்திய அணியின் பவுலிங்கை அடித்து ஆடி 9வது விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்தனர். இவான்ஸ் 33 ரன்களும், ரிச்சர்டு 34 ரன்களும் அடிக்க, அவர்களது பொறுப்பான பேட்டிங்கால் 189 ரன்களையாவது எட்டியது ஜிம்பாப்வே அணி.

40.3 ஓவரில் 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஜிம்பாப்வே அணி. இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய தீபக் சாஹர், பிரசித் கிருஷ்ணா, அக்ஸர் படேல் ஆகிய மூவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு துணைக்கேப்டன் ஷிகர் தவான் - சுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். தொடர்ந்து பவுண்டரிகளைப் பறக்கவிட்ட இருவரும் அரைசதம் கடந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். 

இதன்மூலம் இந்திய அணி 30.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிகர் தவான் 81 ரன்களையும், ஷுப்மன் கில் 82 ரன்களையும் சேர்த்தனர். 

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றது

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை