ZIM vs IRE, 1st ODI: பால்பிர்னி, டெக்டர் அபார சதம; ஜிம்பாப்வேவுக்கு கடின இலக்கு!

Updated: Wed, Jan 18 2023 16:55 IST
ZIM vs IRE, 1st ODI: Harry Tector completes his third ODI ton as Ireland post a good total in Harare (Image Source: Google)

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் அயர்லாந்து அணி தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய அயர்லாந்து அணியில் தொஹனி 3, பால் ஸ்டிர்லிங் 13  என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி - ஹேரி டெக்டர் இணை அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

இதில் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி கேப்டன் பால்பிர்னி சதமடித்து அசத்த, மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி டெக்டரும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 121 ரன்கள் எடுத்திருந்த பால்பிர்னி ரிட்டையர் ஹர்ட் முறையில் களத்திலிருந்து வெளியேறினார்.

அவரைத் தொடர்ந்து வந்த ஜார்ஜ் டக்ரெல், கர்டிஸ் காம்பேர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் இறுதிவரை களத்தில் இருந்த ஹேரி டெக்டர் 102 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களைச் சேர்த்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை