சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்ட காத்திருக்கும் இஷ் சோதி!
Zimbabwe vs New Zealand T20I: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது நியூசிலாந்து பந்து வீச்சாளர் மற்றும் உலகின் மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெறும் வாய்ப்பை இஷ் சோதி பெற்றுள்ளார்.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் நியூசிலாந்து அணி ஏற்கெனவே முதல் லீக் போட்டியில் வெற்றிபெற்ற கையோடு இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. மறுபக்கம் ஜிம்பாப்வே அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய கையோடும் இப்போட்டியை எதிர்கொள்கிறது.
இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் நியூசிலாந்து அணி வீரர் இஷ் சோதி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால், டி20 சர்வதேச போட்டிகளில் 150 விக்கெட்டுகளை வீழ்த்துவார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது நியூசிலாந்து பந்து வீச்சாளர் மற்றும் உலகின் மூன்றாவது பந்து வீச்சாளர் என்ற பெருமையை அவர் பெறுவார். முன்னதாக நியூசிலாந்தின் முன்னாள் வீரர் டிம் சௌதீ 126 போட்டிகளில் 164 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதேசமயம் இஷ் சோது இதுவரை 125 போட்டிகளில் 120 இன்னிங்ஸ்களில் விளையடி 146 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
மேற்கொண்டு சர்வதேச டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனையை நியூசிலாந்தின் முன்னாள் பந்து வீச்சாளர் டிம் சௌதீ படைத்துள்ளார். 164 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த சாதனையைப் படைத்துள்ளார். இந்த பட்டியலில் ஆஃப்கானிஸ்தானின் ரஷீத் கான் 161 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், வங்கதேச அணியின் முன்னாள் வீரர் ஷாகிப் அல் ஹசன் 149 விக்கெட்டுகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
இது தவிர்த்து, நியூசிலாந்து அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்கள் பட்டியலிலும் இஷ் சோதி கூட்டாக முதலிடத்தைப் பிடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். தற்சமயம் டிம் சௌதீ 126 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியதே சாதனையாக உள்ள நிலையில், இஷ் சோதி இதுவரை 125 போட்டிகாளில் விளையாடி இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.