பாகிஸ்தான் அணி தற்சமயம் ஜிம்பாப்வேவில் சுற்றுப்பணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணியானது டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 80 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியதுடன், 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலைப் பெற்றது. 

Advertisement

இந்நிலையில் ஜிம்பாப்வே - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் மற்றும் அப்துல்லா ஷஃபிக் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்து கொடுத்தனர். 

Advertisement

இதில் சைம் அயூப் 31 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஷஃபிக்குடன் இனைந்த காம்ரன் குலாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதில் அரைசதம் கடந்து அசத்திய அப்துல்லா ஷஃபிக் 50 ரன்களுடன் நடையைக் கட்டிய நிலையில், அடுத்து களமிறங்கிய கேப்டன் முகமது ரிஸ்வானும் 37 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த காம்ரன் குலாம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 10 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 103 ரன்களைச் சேர்த்த நிலையில் காம்ரன் குலாம் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களில் ஆகா சல்மான் 30 ரன்களும், தயாப் தாஹிர் 29 ரன்களையும் சேர்க்க, பாகிஸ்தான் அணி 30 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 303 ரனகளைச் சேர்த்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் சிக்கந்தர் ரஸா மற்றும் ரிச்சர்ட் நங்கரவா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி ஜெரால்ட் கும்பி 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய தியான் மேயார்ஸ் 4 ரன்களுக்கும், மற்றொரு தொடக்க வீரர் மருமணி 24 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் கிரேய்க் எர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் இணை பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சீன் வில்லியம்ஸ் 24 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ரஸா 16 ரன்களுடனும் விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரேய்க் எர்வின் அரைசதம் கடந்த கையோடு 51 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

அதன்பின் களமிறங்கிய பிரையன் பென்னட் 37 ரன்களையும், கிளைவ் மடாண்டே 20 ரன்களையும், ரிச்சர்ட் ந்ங்கராவா 17 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, ஜிம்பாப்வே அணி 40.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 204 ரன்களை மட்டுமே சேர்த்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் சைம் அயூப், அப்ரார் அஹ்மத், ஹாரிஸ் ராவுஃப், அமர் ஜமால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News