காட்டடி ரிஸ்வான்; ஜிம்பாப்வேவை ஊதித் தள்ளிய பாகிஸ்தான்!
ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து வரும் பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு முகமது ரிஸ்வான் அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். இருப்பினும் மறுமுனையில் களமிறங்கிய கேப்டன் பாபர் அசாம், முகமது ஹபீஸ், ஃபகர் ஸமான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய முகமது ரிஸ்வான் அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களைச் சேர்த்தது. இதில் முகமது ரிஸ்வான் 82 ரன்களைச் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு தொடக்க முதலே விக்கெட் இழப்பை சந்தித்தது. இருப்பினும் அந்த அணியின் அனுபவ வீரர் எர்வின் சற்று நிலைத்து ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்த முயர்ச்சித்தார்.
இருப்பினும் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 11 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியில் பொறுப்புடன் விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த முகமது ரிஸ்வான் ஆட்டநாயகனாகத் தெர்வுசெய்யப்பட்டார்.