ZIM vs WI, 2nd Test: ஜிம்பாப்வேவை வீழ்த்தை தொடரை வென்றது விண்டீஸ்!

Updated: Tue, Feb 14 2023 22:49 IST
Image Source: Google

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவந்த வெஸ்ட் இண்டிஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இரு அணிக்களுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி முடிவு எட்டப்படாமல் டிரா ஆனாது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது. அதன்படி முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அந்த அணி 40.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதில் இன்னெசண்ட் கையா மட்டுமே 38 ரன்களை எடுத்தார். விண்டீஸ் தரப்பில் குடகேஷ் மோட்டி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி ரோஸ்டன் சேஸ் மற்றும் ரெய்ஃபெர் ஆகியோர் அரைசதம் கடந்தனர். இதனால் அந்த அணி 92.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 292 ரன்களைச் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் நயூச்சி 5 விக்கெட்டுகளையும், பிராண்டன் மவுடா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 177 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஜிம்பாப்வே அணிக்கு இந்த இன்னிங்ஸிலும் ஏமாற்றமே மிஞ்சியது. தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, இன்னெசண்ட் கையா 43 ரன்களிலும், அரைசதம் கடந்த கேப்டன் கிரேய்க் எர்வின் 72 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அவர்களைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்ங்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். விண்டீஸ் தரப்பில் இந்த இன்னிங்ஸுலும் அபாரமாக பந்துவீசிய குடகேஷ் மோட்டி 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் ஜிம்பாப்வே அணி 173 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 4 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் கைப்பற்றியது. இப்போட்டியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய விண்டீஸின் குடகேஷ் மோட்டி ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை