பாகிஸ்தான் ஆணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்தது. இதில் பாகிஸ்தான் அணி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
Advertisement
இந்நிலையில் ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ரியான் பர்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.
Advertisement
இதுகுறித்து ரியான் பர்லின் ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் தற்போது வைரலாகி உள்ளது.
அதோடு பலரும் அவருக்கும், அவரது அணிக்கும் வேண்டும் நிதியுதவி அளிக்க முன் வந்துள்ளனர். சிலர் வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கு மாடர்ன் டே கிரிக்கெட்டில் அளிக்கப்பட்டு வரும் நிதியுதவி குறித்த கேள்வி எழுப்பி உள்ளனர்.