ரியான் பர்ல் உணர்ச்சி பூர்வமான ட்வீட்; உதவிகரம் நீட்டிய புமா!
நிதி நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் ஜிம்பாப்வே அணியால் வீரர்களுக்கு ஷு போன்ற விளையாட்டு உபகரணங்களை வாங்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
1990 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் ஜிம்பாப்வே அணி சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற அணிகளுக்கு சவால் விடும் வகையில் திகழ்ந்தது. கேம்ப்பெல், பிளவர் சகோதரர்கள் போன்ற தலைசிறந்த வீரர்கள் இருந்தார்கள். அதிலும் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற அணிகளுக்கு எதிராக அதிர்ச்சி அளிக்கும் வகையில் விளையாடியுள்ளனர்.
ஆனால் தற்போது ஜிம்பாப்வே அணி நலிவுற்று காணப்படுகிறது. அந்நாட்டு கிரிக்கெட் வாரியமும் நிதியின்றி தவித்து வருகிறது. இதற்கு உதாரணமாக அந்த அணியின் ரியான் பர்லின் ட்விட்டர் பதிவில், “எங்களுக்கு மட்டும் ஏதேனும் ஸ்பான்சர் கிடைக்க வாய்ப்பு இருந்தால் ஒவ்வொரு தொடர் முடிந்த பிறகும் எங்களது ஷூவுக்கு(காலணி) பசை ஒட்ட வேண்டிய அவசியம் இருக்காது” என பதிவிட்டுள்ளார். அவரது ட்வீட் வைரலானது.
இதையடுத்து ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு உதவ பலரும் முன்வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக தற்போதுய் பூமா நிறுவனம் ரியான் பர்லுக்கு ஸ்பான்சர் வழங்க முன்வந்துள்ளது. இதுகுறித்து புமா நிறுவனம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,“நீங்கள் ஒட்டுவதை நிறுத்த வேண்டிய நேரமிது. நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம் ”என்று பதிவிட்டுள்ளது.