உலகக்கோப்பை 2023: மீண்டும் ஒரு கோப்பையை வெல்லுமா இலங்கை?

Updated: Tue, Oct 03 2023 20:14 IST
உலகக்கோப்பை 2023: மீண்டும் ஒரு கோப்பையை வெல்லுமா இலங்கை? (Image Source: Google)

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரு தினங்களில் நடைபெறவுள்ள நிலையில், தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வென்று உலகக்கோப்பையை கைகளில் ஏந்தும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் என உலகக்கோப்பை வென்ற அணிகள் ஆதிக்கம் செலுத்தும் என முன்னாள் வீரர்கள் கணித்துள்ள நிலையில், 1992ஆம் ஆண்டு கோப்பையையும், 2011 ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ள இலங்கை அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்பதே நிதர்சனம்.

ஏனெனில் சமீப கால ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் ஆதிக்கம் 14 போட்டிகளில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் இருந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அந்த அணிக்கு பேரிடியை இறக்கியது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் அதுவரை சிறப்பாக செயல்பட்டு வந்த அணி, இறுதிப்போட்டியில் சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட்டானது அணியின் அனுபமின்மையை காட்டுக்கிறது.

இருப்பினும் நடப்பு உலகக்கோப்பை தொடரில் பல முக்கிய அணிகளுக்கு சவால் விடும் வகையில் இலங்கை அணி விளையாடும் என்ற எதிபார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. அதன்படி இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடும் இலங்கை அணியின் பலம் மற்றும் பலவீனம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

இலங்கை அணியின் பலம்

உலகக்கோப்பை தொடரில் போட்டியின் போக்கையே மாற்றும் திறமை வாய்ந்த, சுழற்பந்து வீச்சாளர்கள் அந்த அணியில் இருப்பது இலங்கையின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. மகேஷ் தீக்ஷனா, துனித் வெல்லலகே, மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் உலகக்கோப்பையில் விக்கெட் வேட்டை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மைதானங்களின் தன்மை இலங்கையை போன்று தான் இருக்கும் என்பது, அவர்களுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. 

பேட்டிங்கில் குசால் பெரேரா, சரித் அசலங்க, பதும் நிஷங்கா, திமுத் கருணரத்னே, குசால் மெண்டிஸ் ஆகியோருடன் கேப்டன் தசுன் ஷனகாவும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மிகப்பெரும் அணிகளுக்கும் இலங்கை அணி சவாலாளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இலங்கை அணியின் பலவீனம்

நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இந்த தொடரில் விளையாடாதது இலங்கை அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் மதீஷா பதீரனா உள்ளிட்ட வீரர்கள் இருந்தாலும், அவர்களுக்கு போதிய அனுபவம் இல்லாதது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பேட்டிங்கிலும் அதே நிலைமை தான் நீடிக்கிறது. 

இலங்கையின் 15 பேர் கொண்ட அணியில் 11 வீரர்கள் உலகக் கோப்பை தொடரில் முதல்முறையாக விளையாட உள்ளனர். கேப்டன் தசுன் ஷனகாவிற்கும் இதுவே முதல் உலகக் கோப்பையாகும். போதிய அனுபவம் இல்லாத இலங்கை அணி, இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற உலகத்தரம் வாய்ந்த அணிகளை எவ்வாறு சமாளிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இலங்கை அணியின் உலகக்கோப்பை பயணம்

  • 1975: லீக் சுற்று
  • 1979: லீக் சுற்று
  • 1983: லீக் சுற்று
  • 1987: லீக் சுற்று
  • 1991: லீக் சுற்று
  • 1996: சாம்பியன்
  • 1999: லீக் சுற்று
  • 2003: அரையிறுதி சுற்று
  • 2007: இரண்டாம் இடம்
  • 2011: இரண்டாம் இடம்
  • 2015: காலிறுதி சுற்று
  • 2019: லீக் சுற்று

உலகக்கோப்பை தொடருகான இலங்கை அணி

தசுன் ஷனகா (கே) குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, பதும் நிசங்க, திமுத் கருணாரத்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷன் ஹேமந்த, மஹீஷ தீக்ஷனா, துனித் வெல்லலகே, கசுன் ராஜிதா, மதீஷா பத்திரனா, லகிரு குமார, தில்ஷன் மதுஷங்க. 

ரிசர்வ் வீரர்: சமிகா கருணாரத்ன.

இலங்கை அணியின் போட்டி அட்டவணை (GMT)

  • அக்டோபர் 7 - இலங்கை vs தென் ஆப்ரிக்கா, டெல்லி (0830)
  • அக்டோபர் 10 - இலங்கை vs பாகிஸ்தான்,     ஹைதராபாத் (0830)
  • அக்டோபர் 16 -    இலங்கை vs ஆஸ்திரேலியா, லக்னோ (0830)
  • அக்டோபர் 21 -    இலங்கை vs நெதர்லாந்து, லக்னோ (0500)
  • அக்டோபர் 26 -    இலங்கை vs இங்கிலாந்து, பெங்களூரு (0830)
  • அக்டோபர் 30 -    இலங்கை - ஆப்கானிஸ்தான், புனே (0830)
  • நவம்பர் 2 -    இலங்கை - இந்தியா, மும்பை (0830)
  • நவம்பர் 6 -    இலங்கை - வங்கதேசம், டெல்லி (0830)
  • நவம்பர் 9 -    இலங்கை - நியூசிலாந்து,பெங்களூரு (0830)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை