ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. ஒரே குரூப்பில் உள்ள அணிகளில் யாருக்கும் சாதகம் ஏற்படக் கூடாது என்பதற்காக ஒரே நேரத்தில் 4 அணிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த ஒரு பகுதியாக குரூப் ஈ பிரிவில் உள்ள ஜப்பான் - ஸ்பெயின் அணிகள் விளையாடியது. இதில் ஜப்பான் அணி வெற்றிபெற்றால் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேற முடியும் என்பதால், ஆட்டம் பரபரப்பாக இருந்தது.

Advertisement

ஆனால் ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்திலேயே ஸ்பெயின் அணியின் மொராட்டா முதல் கோலை அடித்து அசத்த, ரசிகர்கள் அனைவரும் இது ஒன் சைடட் ஆட்டமாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர். அதற்கேற்ப ஸ்பெயின் அணி வீரர்கள் முதல் பாதி அதிக நேரம் பந்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.

Advertisement

ஸ்பெயின் அணிக்கு எதிராக ஜப்பான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட வேண்டிய நிலை உருவாகியது. இருப்பினும் முதல் பாதி ஆட்ட நேரம் முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி முன்னிலை பெற்றது. இதனால் இரண்டாம் பாதி ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் ஜப்பான் அணி, 48வது நிமிடத்திலேயே முதல் கோல் அடித்து அசத்தியது.

இதனால் ஆட்டத்தில் 1-1 என்ற நிலை ஏற்பட, மீண்டும் 51வது நிமிடத்தில் ஜப்பான் அணி இரண்டாவது கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதன் பின்னர் ஸ்பெயின் அணி வீரர்கள் அட்டாக் மேல் அட்டாக் செய்ய தொடங்கினர். அனால் ஸ்பெயின் அணியின் அனைத்து முயற்சிகளையும் ஜப்பான் வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இரண்டாம் பாதி ஆட்ட நேர இறுதியில் கூடுதலாக 7 நிமிடங்கள் வழங்கப்பட்டது. ஆனால் அதிலும் எந்த கோலும் அடிக்கப்படவில்லை. இதன் மூலம் ஜப்பான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அசத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் முன்னாள் சாம்பியன் அணிகளான ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணியை வீழ்த்தியதன் மூலம் ஜப்பான் அணி முதல் அணியாக குரூப் ஈ பிரிவில் இருந்து ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அதேபோல் ஜெர்மனி அணியை காட்டிலும் கூடுதல் அடித்திருந்ததால், ஸ்பெயின் அணியும் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆட்டம் தொடங்கிய போது ஸ்பெயின் அணியே வெற்றிபெறும் என்றும், ஜெர்மனி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக ஜெர்மனியை முதல் போட்டியில் வீழ்த்தியதோடு, மூன்றாவது போட்டியில் ஸ்பெயினையும் வீழ்த்தி ஜப்பான் அனைவருக்கும் ஆச்சரியம் கொடுத்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News