Advertisement

டி20 உலகக்கோப்பை: ஆஃப்கானிஸ்தான் vs நமீபியா - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan October 30, 2021 • 13:26 PM
Afghanistan vs Namibia, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Afghanistan vs Namibia, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 27ஆவது லீக் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் - நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

போட்டி முன்னோட்டம் 

Trending


  • மோதும் அணிகள் - ஆஃப்கானிஸ்தான் vs நமீபியா
  • இடம் -ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி நடப்பு சீசனில் விளையாடிய இரண்டு போட்டிகளில் ஒரு வெற்றி, ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. 

அந்த அணியின் பேட்டிங்கில் ஸஸாய், ஷசாத், குர்பாஸ், ஸத்ரான், நபி என வலிமையாக உள்ளது. பந்துவீச்சில் முஜீப் உர் ரஹ்மான், ரஷித் கான் சிறப்பாக செயல்பட்டு வருவதால் நிச்சயம் இப்போட்டியில் அந்த அணி வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் நமீபிய அணி ஸ்காட்லாந்துடனான முதல் போட்டியில் அசத்தல் வெற்றியைப் பெற்றுள்ளது. அதிலும் கேப்டன் எரஸ்மஸ், ஆல்ரவுண்டர் டேவிட் வைஸ் ஆகியோர் உச்சகட்ட ஃபார்மில் இருப்பது அணியின் வெற்றிவாய்ப்பை அதிகரித்துள்ளது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 2
  • ஆஃப்கானிஸ்தான் - 2
  • நமீபியா - 0

உத்தேச அணி

ஆஃப்கானிஸ்தான் - ஹஸ்ரதுல்லா ஸஸாய், முகமது ஷசாத், ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், முகமது நபி (கே), அஸ்கர் ஆஃப்கான், குல்பாதின் நைப், ரஷித் கான், கரீம் ஜனத், நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான்

நமீபியா - கிரேக் வில்லியம்ஸ், ஜேன் கிரீன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ் (கே), டேவிட் வைஸ், மைக்கேல் வான் லிங்கன், ஜேஜே ஸ்மிட், ஜான் ஃப்ரைலின்க், பிக்கி யா பிரான்ஸ், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ரூபன் ட்ரம்பெல்மேன், பெர்னார்ட் ஷால்ட்ஸ்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ரஹ்மானுல்லா குர்பாஸ், முகமது ஷசாத், ஜேன் கிரீன்
  • பேட்டர்ஸ் - ஹசரத்துல்லா ஸஸாய், நஜிபுல்லா ஸத்ரான், கெர்ஹார்ட் மெர்வே-எராஸ்மஸ்
  • ஆல்-ரவுண்டர்கள் - முகமது நபி, டேவிட் வைஸ்
  • பந்துவீச்சாளர்கள் - முஜீப்-உர்-ரஹ்மான், ரஷித் கான், ரூபன் டிரம்பெல்மேன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement