Advertisement

அஸ்வின் குறித்த மஞ்ச்ரேக்கரின் கருத்துக்கு பதிலடி கொடுத்த இயன் சேப்பல்!

ஆஸ்திரேலியாவின் நாதன் லையனை விட அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் இயன் செப்பல் தெரிவித்துள்ளார்.

Advertisement
Ashwin Is A
Ashwin Is A "Better Bowler" Than Nathan Lyon, Feels Ian Chappell (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 07, 2021 • 01:07 PM

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின். 34 வயதான அஸ்வின் 78 டெஸ்டில் விளையாடி 409 விக்கெட் வீழ்த்தி உள்ளார். அதில் 30 முறை ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 07, 2021 • 01:07 PM

இந்நிலையில் அஸ்வின்  தலை சிறந்த பந்து வீச்சாளர் என்று அழைப்பதில் சிக்கல் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். 

Trending

மஞ்சுரேக்கரின் விமர்சனத்துக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய இயன் சேப்பல், “அஸ்வின் மிகச் சிறந்த சுழற்பந்து வீரர். ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் லயனை விட அவர் சிறந்த வீரர் . வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஜோல் கார்னர் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர் ஆவார். ஆனால் அவர் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளாரா? என்னை பொறுத்தவரை அஸ்வின் சிறந்த பந்து வீச்சாளர் தான்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement