Advertisement
Advertisement
Advertisement

AUS vs NZ, 1st ODI: மேக்ஸ்வெல் அபார பந்துவீச்சு; ஆஸிக்கு 233 டார்கெட்!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 233 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan September 06, 2022 • 14:04 PM
AUS vs NZ, 1st ODI: Glenn Maxwell and Josh Hazlewood's brilliant bowling restrict New Zealand to a s
AUS vs NZ, 1st ODI: Glenn Maxwell and Josh Hazlewood's brilliant bowling restrict New Zealand to a s (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இன்று தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் மார்ட்டின் கப்தில் 6 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அதன்பின் ஜோடி சேர்ந்த டேவன் கான்வே - கேன் வில்லியம்சன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். 

Trending


பின்னர்  இவரும் அரைசதம் அடிப்பார்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டேவன் கான்வே 46 ரன்களிலும், கேன் வில்லியன்சன் 45 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.  

இதையடுத்து களமிறங்கிய டாம் லேதமும் 43 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அதன்பின் களமிறங்கிய வீரர்களும் ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கிளென் மேக்ஸ்வெல் 4 விக்கெட்டுகளையும், ஜோஷ் ஹசில்வுட் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement