Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை: ஆஸ்திரேலியா vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்த்ரேலிய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. 

Advertisement
Australia vs Sri Lanka, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
Australia vs Sri Lanka, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 27, 2021 • 08:46 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 27, 2021 • 08:46 PM

இத்தொடரில் நாளை நடைபெறும் 22ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்த்ரேலிய அணி, வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. 

Trending

போட்டி முன்னோட்டம் 

  • மோதும் அணிகள் -  ஆஸ்திரேலியா vs இலங்கை
  • இடம் -துபாய் சர்வதேச மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ஆரோன் ஃபிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக சிறப்பாப வெற்றியைப் பெற்ற மகிழ்ச்சியோடு நாளைய போட்டியில் களமிறங்குகிறது.

அணியில் மேக்ஸ்வெல், ஸ்டோய்னிஸ், ஸ்மித் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அணிக்கு சற்று பலமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் பந்துவீச்சில் ஸ்டார்க், ஸாம்பா, ஹசில்வுட் இருப்பது அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்துள்ளது. 

தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் வங்கதேச அணிக்கெதிராக கடின இலக்கை சேஸ் செய்து அசத்தியது. அந்த அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்ஷ இணை சிறப்பாக விளையாடி வருகிறது. 

பந்துவீச்சில் ஹசரங்கா, சமீரா, கருணரத்னே இருப்பது நிச்சயம் எதிரணிக்கு தலைவலியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 16
  • ஆஸ்திரேலியா வெற்றி -8
  • இலங்கை வெற்றி - 8

உத்தேச அணி

ஆஸ்திரேலியா - ஆரோன் பின்ச் (கே), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மேத்யூ வேட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

இலங்கை - குசல் பெரேரா, பதும் நிஷங்க, சரித் அசலங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷனக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, பினுர ஃபெர்னாண்டோ, லஹிரு குமார.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - குசல் பெரேரா, மேத்யூ வேட்
  • பேட்டர்ஸ் - சரித் அசலங்கா, பானுகா ராஜபக்ச, மார்கஸ் ஸ்டோனிஸ், ஸ்டீவன் ஸ்மித்
  • ஆல்-ரவுண்டர்கள் - வனிந்து ஹசரங்க, கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ்
  • பந்துவீச்சாளர்கள் - துஷ்மந்த சமீர, மிட்செல் ஸ்டார்க்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement