Advertisement

ஆசிய கோப்பை 2023: ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan August 12, 2023 • 13:34 PM
ஆசிய கோப்பை 2023: ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு!
ஆசிய கோப்பை 2023: ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி அறிவிப்பு! (Image Source: Google)
Advertisement

வங்கதேச கிரிக்கெட் அணி வரும் 30ஆம் தேதி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட உள்ளது. அதனை அடுத்து சொந்த ஊரில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின் இந்தியாவில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் வங்கதேச அணியின் ஒருநாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து தமிம் இக்பால் திடீரென விலகினார். மேலும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்தும் விலகியுள்ளார். இதனையடுத்து புதிய கேப்டனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் இறங்கியது. அதன்படி வங்கதேச கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை மற்றும் ஆசிய கோப்பை தொடருக்கான கேப்டனாக ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Trending


இந்நிலையில் ஆசிய கோப்பை தொடருக்கான வங்கதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான இந்த அணியில் லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன், டஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், நஜ்முல் ஹொசைன், அஃபிஃப் ஹொசைன், முஷ்ஃபிகூர் ரஹீம் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். 

வங்கதேச அணி: ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், தன்ஜித் ஹசன் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்ஃபிகூர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், டஸ்கின் அகமது, முஸ்தஃபிசூர் ரஹ்மான், ஹசன் மம்ஹூத், மஹேதி ஹசன், நசும் அகமது, ஷமிம் ஹொசைன், ஆபிப் ஹொசைன், ஷோரிபுல் இஸ்லாம், எபடோட் ஹொசைன், முகமது நைம்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement