Advertisement
Advertisement
Advertisement

பிபிஎல் 2022: சிக்சர்ஸை வீழ்த்தி ஸ்டிரைக்கர்ஸ் அபார வெற்றி!

சிட்னி சிக்சர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது..

Bharathi Kannan
By Bharathi Kannan January 17, 2022 • 16:15 PM
BBL 2021:  Adileide Strikers beat Sydney Sixers by 8 wickets
BBL 2021: Adileide Strikers beat Sydney Sixers by 8 wickets (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 52ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சிக்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களைச் சேர்த்தது. 

Trending


அந்த அணியில் அதிகபட்சமாக ஜஸ்டின் அவந்தனோ 52  ரன்களையும், ஜேக் எட்வர்ட்ஸ் 34 ரன்களையும் சேர்த்தனர். ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் ஃபவத் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து இலக்கை துரத்திய தண்டர் அணிக்கு ரென்ஷோ- காக்பின் இணை அபாரமான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். 

இதன்மூலம் 17.3 ஓவர்களில் தண்டர் அணி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement