Advertisement

பிபிஎல் 2021: மெக்டர்மோட் சததில் ஹரிகேன்ஸ் அபார வெற்றி!

அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கெதிரான பிக் பேஷ் லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 27, 2021 • 16:11 PM
BBL 2021: Hurricanes’ Ben McDermott 110* blows away Strikers
BBL 2021: Hurricanes’ Ben McDermott 110* blows away Strikers (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி வெதர்லட், ரென்ஷா ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களைச் சேர்த்தது. 

Trending


இதில் அதிகபட்சமாக ரென்ஷா 63 ரன்களையும், வெதர்லட் 51 ரன்களையும் சேர்த்தனர். ஹாபர்ட் அணி தரப்பில் மெரிடித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு தொடக்க வீரர் பென் மெக்டர்மோட் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தார். 

தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய மெக்டர்மோட் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் 18.3 ஓவர்களில் ஹாபர்ட் அணி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணியை வீழ்த்தியது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பென் மெக்டர்மோட் 110 ரன்களைச் சேர்த்து அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement