Advertisement

பிபிஎல் 2022: ஸ்காச்சர்ஸை வீழ்த்தியது ஸ்டிரைக்கர்ஸ்!

பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 14, 2022 • 17:48 PM
BBL 2022: Adileide Strikers beat Perth Scochers by 7 wickets
BBL 2022: Adileide Strikers beat Perth Scochers by 7 wickets (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் டி20 தொடரில் இன்று நடைபெற்ற 49ஆவது லீக் ஆட்டத்தில் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் - பெர்த் ஸ்காச்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஸ்டிரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

Trending


அந்த அணியில் அதிகபட்சமாக லௌரி எவன்ஸ் 39 ரன்களையும், ஆஷ்டன் டர்னர் 28 ரன்களையும் சேர்த்தனர். ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் ஃபவத் அஹ்மத் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய ஸ்டிரைக்கர்ஸ் அணிக்கு மேத்யூ ஷார்ட் - ஹென்ரி ஹண்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து வெற்றியை எளிதாக்கினர். 

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ஈயான் காக்பின் அதிரடியாக விளையாடி 35 ரன்களைச் சேர்த்ததுடன், அணியை வெற்றிபெறவும் செய்தார்.

இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 17 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement