Advertisement

பிபிஎல் 2022: மேக்ஸ்வெல் காட்டடி; மெல்போர்ன் ஸ்டார்ஸ் வெற்றி!

மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிக்கெதிரான பிபிஎல் லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 13, 2022 • 17:56 PM
BBL 2022: Melbourne Stars beat Melbourne Renegates by 6 wickets
BBL 2022: Melbourne Stars beat Melbourne Renegates by 6 wickets (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 48ஆவது லீக் ஆட்டத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் - மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.  

Trending


இருப்பினும் ஆரோன் ஃபிஞ்ச், மெக்கர்க் ஆகியோர் சிறப்பான அட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் ரெனிகேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்களை மட்டுமே சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக ஆரோன் ஃபிஞ்ச் 45 ரன்களையும், மெக்கர்க் 32 ரன்களையும் சேர்த்தனர். ஸ்டார்ஸ் அணி தரப்பில் ஸாம்பா, ராவுஃப், அஹ்மத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஸ்டார்ஸ் அணியிலும் விக்கெட்டுகள் மளமளவெ சரிய, தொடக்க வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல் மட்டும் நிலைத்து விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். 

இதில் அரைசதம் கடந்த மேக்ஸ்வெல் 68 ரன்களைச் சேர்த்ததுடன் அணியை வெற்றிபெறவும் செய்தார். இதன்மூலம் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி 14.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை வீழ்த்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement