Advertisement
Advertisement

பிபிஎல் 2022: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பெர்த் ஸ்காச்சர்ஸ்!

சிட்னி சிக்சர்ஸுக்கு எதிரான பிபிஎல் குவாலிஃபையர் லீக் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 22, 2022 • 17:58 PM
BBL 2022: Perth Scochers defeat Sydney Sixers by 48 runs and rech the BBL finals
BBL 2022: Perth Scochers defeat Sydney Sixers by 48 runs and rech the BBL finals (Image Source: Google)
Advertisement

பிக் பேஷ் லீக் தொடரின் 11ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற குவாலிஃபையர் ஆட்டத்தில் பெர்த் ஸ்காச்சர்ஸ் - சிட்னி சிக்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி ஜோஷ் இஙலிஸ் - குர்டிஸ் பேட்டர்சன் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களைச் சேர்த்தது. 

Trending


இதில் அதிகபட்சமாக ஜோஷ் இங்லிஸ் 79 ரன்களையும், குர்டிஸ் பேட்டர்சன் 64 ரன்களையும் சேர்த்தனர். சிக்சர்ஸ் அணி தரப்பில் ஹெய்டன் கெர் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை துரத்திய சிட்னி சிக்சர்ஸ் அணி தொடக்கம் முதலே மளமளவென விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இறுதியில் அந்த அணியின் பென் துவர்ஷுயிஸ் மட்டும் அதிரடியாக விளையாடி 29 பந்துகளில் 69 ரன்களைச் சேர்த்தார். 

ஆனாலும் அந்த அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் பெர்த் ஸ்காச்சர்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் சிட்னி சிக்சர்ஸ் அணியை வீழ்த்தி பிபிஎல் 11ஆவது சீசனின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement