Advertisement

புஜாராவுக்கான மாற்று வீரர் இவர்தான் - பிராட் ஹாக்

டெஸ்ட் கிரிக்கெட்டில் புஜாராவுக்கு சரியான மாற்று வீரர் யார் என்பதை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan July 03, 2021 • 11:09 AM
Brad Hogg names Cheteshwar Pujara's replacement for England series
Brad Hogg names Cheteshwar Pujara's replacement for England series (Image Source: Google)
Advertisement

டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் முக்கியமான நட்சத்திர வீரராக ஜொலித்துவருபவர் சட்டேஸ்வர் புஜாரா. ஆனால் அண்மைக்காலமாக சரியான ஃபார்மில் இல்லாமல் ரன்களைச் சேர்க்க புஜாரா திணறிவருகிறார்.

இதுவரை 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 6,244 ரன்கள் அடித்திருந்தாலும், அவரது மிக மெதுவான இன்னிங்ஸ் எப்போதுமே விமர்சனத்துக்குள்ளாகியே உள்ளது. அதிலும், அண்மைக்காலமாக ஸ்டிரைக் ரேட் குறைவாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், அவரது பேட்டிங் மிக அவுட் ஆஃப் ஃபார்மில் உள்ளது. 

Trending


இதனால் புஜாராவுக்கு மாற்று வீரரை தேட தொடங்குவதற்கான  நேரம் வந்துவிட்டதாகவே ரசிகர்கள் கருதுகின்றனர். இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ள நிலையில், அந்த தொடரில் புஜாராவுக்கு பதிலாக 3ஆம் வரிசையில் கேஎல் ராகுலை இறக்கலாமா என்று பிராட் ஹாக்கிடம் ஒருவர் டுவிட்டரில் கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த பிராட் ஹாக்,“புஜாராவுக்கு மாற்று வீரர் என்றால் அது என்னை பொறுத்தமட்டில் பிரித்வி ஷா தான். பிரித்வி ஷாவிற்கு ஓபனிங்கை விட 3ஆம் வரிசை தான் சரியான பேட்டிங் ஆர்டர். பிரித்வி ஷா மிகச்சிறந்த திறமைசாலி. அவருக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது. இங்கிலாந்து தொடரில் பிரித்வி ஷா இல்லையென்றாலும், அவர் வைல்ட் கார்டு சாய்ஸாக இருப்பார்” என தெரிவித்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement