Advertisement

புதிய லுக்கில் தீபக் சஹார்; கமெண்ட் அடித்த சுரேஷ் ரெய்னா!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹாரின் புகைப்படத்திற்கு சுரேஷ் ரெய்னா பதிவிட்ட கமெண்ட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan June 09, 2021 • 22:33 PM
chennai-super-kings-csk-suresh-raina-reaction-on-deepak-chahar-new-look
chennai-super-kings-csk-suresh-raina-reaction-on-deepak-chahar-new-look (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் நடைபெற்று வந்த 14 ஆவது ஐபிஎல் தொடரில் சில அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதியானதால் பாதியில் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள், செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளதாகவும் பிசிசிஐ அறிவித்துள்ளது. 

இதில், இந்திய வேகப்பந்து வீச்சாளரான தீபக் சாஹர், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பவர்பிளே ஓவர்களை சிறப்பாக வீசுவதில் வல்லமையுள்ள தீபக் சாஹர், இந்த சீசனில் இதுவரை, 7 போட்டிகள் விளையாடி 8 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

Trending


இந்நிலையில், சஹார் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும், அந்த பதிவில் 'புதிய லுக்' என்றும் குறிப்பிட்டுள்ளார். எப்போதும் அதிக முடியுடன் இருக்கும் தீபக் சாஹர், தனது புதிய லுக்கில், மொத்தமாக ட்ரிம் செய்த தலையுடன் ‘கஜினி’ சூர்யா போல் போஸ் கொடுத்துள்ளார். 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், சிஎஸ்கேவின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா,  தீபக் சாஹரின் புகைப்படத்திற்கு, கிண்டலான ஒரு கமெண்ட்டை பதிவு செய்துள்ளது. அவரது பதிவில் 'பேமிலி மேன் பார்ட் 3 ஆன் தி வே' என குறிப்பிட்டுள்ளார்.

 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement