Advertisement

ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

ஐபிஎல் 2022: ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணி, மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 03, 2022 • 11:04 AM
Chennai Super Kings vs Punjab Kings, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable
Chennai Super Kings vs Punjab Kings, IPL 2022 – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 11ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 

போட்டி தகவல்கலள்

Trending


  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • மோதும் அணிகள் - பிராபோர்ன் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை அணி இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. சென்னை அணியின் பேட்டிங் சிறப்பாக இருந்தாலும், தீபக் சஹர் போன்ற விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாகவே உள்ளது. மறுபக்கம் பஞ்சாப் கிங்ஸ், இரண்டு போட்டிகள் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது.

சென்னை அணி முதல் போட்டியில் தடுமாறினாலும், இரண்டாவது போட்டியில் பேட்டிங் சிறப்பாகவே செய்தனர். உத்தப்பா, மொயின் அலி, சிவம் துபே, தோனி போன்ற வீரர்கள் பேட்டிங்கில் பலம் சேர்க்கிறார்கள். ஆனால் அந்த அணியில் பவுலிங் அட்டாக் அவ்வளவு சிறப்பாக செயல்பட முடியவில்லை.

முக்கியமான விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்கள் இல்லாமல் அந்த அணி திணறுகிறது. ஜடேஜாவின் கேப்டன்ஸியும் இன்னும் ஒரு வெற்றி கூட பெறாமல் இருக்கிறது. மறுபக்கம், பஞ்சாப் கிங்ஸ்யில் பானுகா ராஜபக்ச, ஒடின் ஸ்மித் போன்ற வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்கிறார்கள். ராகுல் சஹர், ராபாடா ஆகியோர் முக்கிய பந்துவீச்சாளர்களாக இருப்பர்.

சென்னை அணியில் ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டன் போன்ற வீரர்கள் காயம் காரணமாக இன்று விளையாடுவது சந்தேகமாக உள்ளன

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 26
  • சென்னை வெற்றி - 16
  • பஞ்சாப் வெற்றி - 10

உத்தேச அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பத்தி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா (கே), ஷிவம் துபே, டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ், முகேஷ் சவுத்ரி/ ராஜ்வர்தன் ஹங்கரேகேகர், துஷார் தேஷ்பாண்டே.

பஞ்சாப் கிங்ஸ் - மயங்க் அகர்வால் (கே), ஷிகர் தவான், லியாம் லிவிங்ஸ்டோன்/ ஜானி பேர்ஸ்டோவ், பானுகா ராஜபக்சே, ஒடியன் ஸ்மித், ஷாருக் கான், ஹர்ப்ரீத் பிரார், ராஜ் பாவா/ ரிஷி தவான், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சாஹர்.

ஃபேண்டஸீ லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - பானுகா ராஜபக்ச
  • பேட்டர்ஸ் - ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மயங்க் அகர்வால்
  • ஆல்-ரவுண்டர்கள் - மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, ஒடியன் ஸ்மித், டுவைன் பிரிட்டோரியஸ்
  • பந்துவீச்சாளர்கள் - டுவைன் பிராவோ, ராகுல் சாஹர், ககிசோ ரபாடா.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement