Advertisement
Advertisement
Advertisement

ஆண் குழந்தைக்கு தந்தையானார் கம்மின்ஸ்!

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 12, 2021 • 17:15 PM
Cummins welcomes first child, heads to World Cup
Cummins welcomes first child, heads to World Cup (Image Source: Google)
Advertisement

கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்பட்ட பிறகு வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் பங்கேற்கவில்லை. கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த கம்மின்ஸ், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியிலும் பங்கேற்கவில்லை. 

இந்நிலையில் கம்மின்ஸ் - பெக்கி பாஸ்டன் இணை கடந்த ஏப்ரல் மாதம், விரைவில் குழந்தை பிறக்கவிருக்கும் தகவலைத் தெரிவித்தார் பெக்கி பாஸ்டன். இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் கம்மின்ஸ். 

Trending


இதுதொடர்பாக விடியோ வெளியிட்டு தன்னுடைய சந்தோஷத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அக்டோபர் 8 அன்று பிறந்த குழந்தைக்கு அல்பி பாஸ்டன் கம்மின்ஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

குழந்தையின் வரவுக்காக ஐபிஎல் போட்டியில் பங்கேற்காத கம்மின்ஸ், தற்போது உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக இன்று துபாய்க்கு கிளம்பியுள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement