Advertisement

ஐபிஎல் தொடரில் புது அவதாரம் எடுக்கும் டேல் ஸ்டெயின்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 16, 2021 • 15:58 PM
Dale Steyn in line to be roped in as SRH's bowling coach
Dale Steyn in line to be roped in as SRH's bowling coach (Image Source: Google)
Advertisement

தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த ஸ்டெயின், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் விலகியுள்ளார். 

இதுவரை 93 டெஸ்ட், 125 ஒருநாள், 47 டி20 என சர்வதேச கிரிக்கெட்டில் 600க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

Trending


அதுமட்டுமில்லாமல் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உள்ளிட்ட அணிகளுக்காக 95 போட்டிகளில் விளையாடி 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார். 

இந்நிலையில், தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சாளராக டேல் ஸ்டெயின் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்த அறிவிப்பை ஹைதராபாத் அணி கூடிய விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement