Advertisement

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs வங்கதேசம் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

டி20 உலகக்கோப்பை தொடரில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து - வங்கதேச அணிகள் பலப்பரீசட்சை நடத்துகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan October 26, 2021 • 21:47 PM
England vs Bangladesh, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
England vs Bangladesh, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

இதில் நாளை நடைபெறும் 20ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, வங்கதேச அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

Trending


போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs வங்கதேசம்
  • இடம் - ஷேக் சயீத் மைதானம், அபுதாபி
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோடம் 

ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி நடப்பு சீசன் டி20 உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய உற்சாகத்துடன் நாளைய போட்டியில் களமிறங்குகிறது. 

இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோவ், மொயீன் அலி ஆகியோர் பேட்டிங்கிலும், டைமல் மில்ஸ், கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் பந்துவீச்சுலும் மிரட்டி வருவதால் நிச்சயம் அந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

அதேசமயம் மஹ்முதுல்லா தலைமையிலான வங்கதேச அணி, இலங்கை அணியுடன் போராடி தோல்வியைத் தழுவியது. இருப்பினும் அந்த அணியில் முகமது நைம், ஷாகிப் அல் ஹசன் ஆகியோர் சிறப்பாக விளையாடிவருவது அணிக்கு பலமாக அமைந்துள்ளது. 

பந்துவீச்சில் நசும் அஹ்மது, முஸ்தபிசூர் ரஹ்மான் ஆகியோர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நாளைய போட்டியில் நிச்சயம் நெருக்கடியை உண்டாக்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நேருக்கு நேர்

இங்கிலாந்து - வங்கதேச அணிகள் இதுநாள் வரை டி20 போட்டிகளில் விளையாடியது இல்லை. 

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஈயான் மோர்கன் (கே), ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், அதில் ரஷித், டைமல் மில்ஸ்

வங்கதேசம்- முகமது நைம், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன், முஷ்பிக்கூர் ரஹீம், மஹ்முதுல்லா (கே), அபிஃப் ஹொசைன், நூருல் ஹசன், மஹேதி ஹசன், முகமது சைபுதீன், நசும் அஹ்மது, முஸ்தாபிசுர் ரஹ்மான்.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - முஷ்பிக்கூர் ரஹீம், ஜோஸ் பட்லர்
  • பேட்டர்ஸ் - முகமது நைம், ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஷாகிப் அல் ஹசன், மஹேதி ஹசன், கிறிஸ் வோக்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - முஸ்தபிகுர் ரஹ்மான், அதில் ரஷித், டைமல் மில்ஸ்


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement