Advertisement

டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து vs இலங்கை - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

டி20 உலகக்கோப்பை: நாளை நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan October 31, 2021 • 15:51 PM
England vs Sri Lanka, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI
England vs Sri Lanka, T20 World Cup – Cricket Match Prediction, Fantasy XI Tips & Probable XI (Image Source: Google)
Advertisement

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விருந்துபடைக்கும் வகையில் டி20 உலகக்கொப்பை தொடரின் ஏழாவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. 

இதில் நாளை நடைபெறும் 29ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, இலங்கை அணியை எதிர்கொள்கிறது. 

Trending


போட்டி தகவல்கள் 

  • மோதும் அணிகள் - இங்கிலாந்து vs இலங்கை
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதனாம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

ஈயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று அரையிறுதிச்சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. ‘’

அணியின் பேட்டிங்க் ஆர்டரில் பட்லர், ராய், மொயீன் அலி, லிவிங்ஸ்டோன் ஆகியோரும் பந்துவீச்சில் ஆதில் ரஷித், வோக்ஸ், ஜோர்டன் ஆகியோரும் சிறப்பாக செயல்பட்டு வருவது அணியின் வெற்றிவாய்ப்பை அதிகரித்துள்ளது. 

தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி நடப்பு சீசனில் விளையாடிய 3 போட்டியில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. இதனால் அந்த அணி அடுத்தடுத்து பெரிய வெற்றிகளை பெற்றால் மட்டுமே அரையிறுதி சுற்றைப் பற்றி நினைத்து பார்க்க முடியும்.

அணியில் நிஷங்கா, அசலங்கா, ராஜபக்ஷ ஆகியோர் பேட்டிங்கிலும், ஹசரங்கா, சமீரா அகியோர் பந்துவீச்சிலும் ஜொலித்து வருவது அணிக்கு சற்று நம்பிக்கையளிக்கும் விசயமாக பார்க்கப்படுகிறது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 12
  • இங்கிலாந்து வெற்றி - 8
  • இலங்கை வெற்றி - 4

உத்தேச அணி

இங்கிலாந்து - ஜேசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஈயான் மோர்கன் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஆதில் ரஷித், டைமல் மில்ஸ்.

இலங்கை - குசல் பெரேரா, பதும் நிஷங்கா, சரித் அசலங்க, அவிஷ்க ஃபெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ, தசுன் ஷானக (கே), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, மஹேஷ் தீக்ஷன/ அகில தனஞ்சய, லஹிரு குமார/ பினுர ஃபெர்னன்டோ

Also Read: T20 World Cup 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், ஜானி பேர்ஸ்டோவ்
  • பேட்டர்ஸ் - ஜேசன் ராய், சரித் அசலங்க, பானுக ராஜபக்ஷ, பதும் நிஸ்ஸங்க
  • ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன், மொயின் அலி, வனிந்து ஹசரங்க
  • பந்துவீச்சாளர்கள் - ஆதில் ரஷித், துஷ்மந்த சமீர


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement