இறுதி போட்டிக்கு காத்திருக்கிறேன் - கேன் வில்லியம்சன்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட காத்திருப்பதாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் ஹாம்ப்ஷையர் மைதானத்தில் ஜூன் 18ஆம் தேதியில் இருந்து 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. டெஸ்ட் போட்டிகளுக்கான புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, இந்திய அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
கிட்டத்தட்ட டி20, ஒருநாள் உலகக் கோப்பைக்கு இணையான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இதற்கிடையில் இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த இறுதி போட்டி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும், இரு அணிகளுக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர்.
Trending
அதே போல் இறுதி போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ள இரு அணி வீரர்களும் தங்களது எதிர்பார்ப்பை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இறுதி போட்டிக்கு ஆவலுடன் காத்திருப்பதாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கேன் வில்லியம்சன்“இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவது சவாலான காரியம். அதனால் தான் இந்தியாவுடன் விளையாடுவது எப்போதும் எனக்கு உற்சாகத்தை தரக்கூடிய ஒன்று. அதுவும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி என்றால் சொல்ல வேண்டாம். அந்த உற்சாகத்திற்கு எல்லையே கிடையாது. அதோடு அதில் கிடைக்கும் வெற்றி ஆகச்சிறந்த ஒன்று” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now