Advertisement

ENG vs PAK, 2nd ODI: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இங்கிலாந்து!

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 11, 2021 • 11:43 AM
Hasan Ali's Fifer In Vain As England Beats Pakistan By 52 Runs, Takes Unassailable 2-0 Lead
Hasan Ali's Fifer In Vain As England Beats Pakistan By 52 Runs, Takes Unassailable 2-0 Lead (Image Source: Google)
Advertisement

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று லண்டனிலுள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தால் ஆட்டம் 47 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

இதையடுத்து டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 45.2 ஓவர்களில் 247 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அந்த அணியின் சார்பில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 60 ரன்களும், ஜேம்ஸ் வின்ஸ் 56 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியின் சார்பில் ஹசன் அலில் 5 விக்கெட்டுகளும், ஹரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Trending


இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 41 ஓவரில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து. இங்கிலாந்து அணியின் சார்பில் கிரிகோரி 3 விக்கெட்டுகளும், ஒவர்டோன், பர்கின்சன் மற்றும் மெக்மூத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். 

 இதன்மூலம் 52 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று, ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement