Advertisement
Advertisement
Advertisement

ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார் - ருதுராஜ் கெய்க்வாட்!

ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது என இந்திய அணியின் துணைக்கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan August 21, 2023 • 12:58 PM
ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார் - ருதுராஜ் கெய்க்வாட்!
ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார் - ருதுராஜ் கெய்க்வாட்! (Image Source: Google)
Advertisement

இந்திய அணி தற்போது அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மேலும் நேற்றைய போட்டியில் இந்திய அணியின் அறிமுக வீரரான ரிங்கு சிங் அதிரடியாக விளையாடி 38 ரன்களை குவித்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார். 

Trending


இந்நிலையில் ரிங்கு சிங் குறித்து இந்திய அணியின் துணை கேப்டன் ருத்ராஜ் கூறும்பொழுது, “இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு பிறகு ரிங்கு சிங் அனைவருக்கும் பிடித்தவர் ஆகிவிட்டார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் பேட்டிங்கில் மிகவும் முதிர்ச்சியை காட்டினார். ரிங்குவின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால் அவர் முதல் பந்தில் இருந்து அடிக்க ஆரம்பிப்பது கிடையாது.

நிலைமை என்னவாக இருந்தாலும் ரிங்கு தனக்கு எப்பொழுதும் ஒரு நேரம் ஒதுக்குகிறார். நிலைமைகளை மிகச் சரியாக மதிப்பிடுகிறார். இதற்கு அடுத்துதான் அவர் தாக்குதல் முறையில் சென்று ரன் சேர்க்கிறார்.எனவே வரவிருக்கும் வீரர்களும், ஃபினிஷிங்கில் ஆடக்கூடிய வீரர்களும் அவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறிது நேரம் நீங்கள் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். பின்னர் நீங்கள் அதிரடியில் ஈடுபடலாம். இதை அவர் கற்றுக் கொண்டார் என்று நான் நினைக்கிறேன்.

எப்பொழுது ட்ரிக்கரை இழுக்க வேண்டும் என்று அவருக்குத் தெரியும். இந்தத் திறமை அவருக்கு இருக்கிறது. சரியான நேரத்தில் அவர் ட்ரிக்கரை இழுத்தார். இது அவருக்கு முக்கியமான இன்னிங்ஸ் ஆக இருந்தது. இது அவருக்கு முதல் ஆட்டமாகவும் இருந்தது. மேலும் இது அவருக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement