Advertisement

ஐசிசி டி20 உலகக்கோப்பை 2022 அட்டவணை; மீண்டும் மோதும் இந்தியா - பாகிஸ்தான்!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 2022 டி20 உலகக் கோப்பைப் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது இந்திய அணி.

Advertisement
ICC Announces Schedule For ICC T20 World Cup 2022, India vs Pakistan To Be Played At MCG
ICC Announces Schedule For ICC T20 World Cup 2022, India vs Pakistan To Be Played At MCG (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 21, 2022 • 11:07 AM

2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தியது பிசிசிஐ.  2022 டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி ஆகிய நகரங்களில் உலகக் கோப்பைப் போட்டியின் 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 21, 2022 • 11:07 AM

நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டிலும் நவம்பர் 13 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்திலும் நடைபெறவுள்ளன.

Trending

சூப்பர் 12 சுற்றுக்கு ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா உள்ளீட்ட 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய நாடுகள் முதல் சுற்றில் விளையாடுகின்றன. 

மீதமுள்ள 4 நாடுகள் தகுதிச்சுற்றின் வழியே போட்டியில் பங்கேற்கும். முதல் சுற்றில் தேர்வாகும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் இதர அணிகளுடன் இணைந்துகொள்ளும்.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல் சுற்று ஆட்டங்கள் அக்டோபர் 16 அன்று தொடங்குகின்றன. அக்டோபர் 22-இல் தொடங்கும் சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டமாக ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. 

அக்டோபர் 23, ஞாயிறன்று இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்கு இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுடைய முதல் ஆட்டத்தில் மோதுகின்றன. கடந்த உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட நிலையில், தற்போதும் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் ஆட்டங்கள்

  • அக்டோபர் 23: இந்தியா - பாகிஸ்தான், மெல்போர்ன்
  • அக்டோபர் 27: இந்தியா - முதல் சுற்றின் வழியே தேர்வான அணி, சிட்னி
  • அக்டோபர் 30: இந்தியா - தென் ஆப்பிரிக்கா, பெர்த்
  • நவம்பர் 2: இந்தியா - வங்கதேசம், அடிலெய்ட்
  • நவம்பர் 6: இந்தியா - முதல் சுற்றின் வழியே தேர்வான அணி, மெல்போர்ன்

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement