Advertisement

IND vs SL: இலங்கை அணியின் கேப்டனாக ஷானகா நியமனம்?

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக தசுன் ஷான்கா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan July 08, 2021 • 17:37 PM
IND vs SL: Dasun Shanaka set to replace Kusal Perera as SL limited-overs skipper
IND vs SL: Dasun Shanaka set to replace Kusal Perera as SL limited-overs skipper (Image Source: Google)
Advertisement

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி கடந்த மாதம் இலங்கை சென்று தற்போது பயிற்சி ஆட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. 

இந்நிலையில் குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி, இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரை இழந்த கையோடு நேற்றைய தினம் நாடு திரும்பியது. இதையடுத்து அவர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

Trending


மேலும் தற்போது இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷானகா நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஏனெனில் கடந்த மே மாதம் இலங்கை அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி வங்கதேச, இங்கிலாந்து ஆகிய அணிகளுடனான தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் நாடுதிரும்பியுள்ளது. 

இதனால் அத்தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தசுன் ஷானகாவை இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement