Advertisement
Advertisement
Advertisement

IND vs SL: ஸ்டெயினை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் டேல் ஸ்டெய்னைத் பின்னுக்கு தள்ளினார் ரவிச்சந்திரன் அஸ்வின். 

Bharathi Kannan
By Bharathi Kannan March 14, 2022 • 16:06 PM
Ind vs SL: Ravichandran Ashwin becomes 8th highest wicket-taker in Test cricket history, overtakes D
Ind vs SL: Ravichandran Ashwin becomes 8th highest wicket-taker in Test cricket history, overtakes D (Image Source: Google)
Advertisement

இலங்கைக்கு எதிரான மொஹலி டெஸ்டில் 6 விக்கெட்டுகள் எடுத்ததோடு பேட்டிங்கில் அரை சதமும் எடுத்து அசத்தினார் அஸ்வின். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில் தேவ் எடுத்திருந்த 434 விக்கெட்டுகளைத் தாண்டி சென்று, 436 விக்கெட்டுகளுடன் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர்களில் 2ஆம் இடத்துக்கு முன்னேறினார்.

இந்நிலையில் பெங்களூர் டெஸ்டில் மேலும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின், இன்று குசால் மெண்டிஸை 54 ரன்களிலும், தனஞ்ஜெயா டி சில்வாவை 4 ரன்களிலும் வீழ்த்தினார். இதையடுத்து 93 டெஸ்டுகளில் 439 விக்கெட்டுகளை வீழ்த்திய டேல் ஸ்டெய்னைத் தாண்டிச் சென்றார்.

Trending


இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 86 ஆட்டங்களில் 440 விக்கெட்டுகள் எடுத்துள்ளார் அஸ்வின். இதன்மூலம் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 8ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement