Advertisement

IND vs SL: குர்னால் பாண்டியாவல் நீடிக்கும் குழப்பம்; இன்றைய போட்டிக்கான பிளேயிங் லெவன் என்ன?

இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் யார் யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement
IND vs SL: What is the India's playing eleven for today's match?
IND vs SL: What is the India's playing eleven for today's match? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 28, 2021 • 09:38 AM

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய, இலங்கை அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, நேற்று நடைபெற இருந்த இரண்டாவது டி20 போட்டி இன்றைக்கு மாற்றப்பட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 28, 2021 • 09:38 AM

அதேசமயம் குர்னால் பாண்டியா உள்பட, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 8 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில், நெகட்டிவ் என முடிவு வந்துள்ளது. எனினும் அவர்கள் இன்று நடைபெறும் போட்டியில் களமிறங்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending

அதிலும் இரு வீரர்கள் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் என்பதும் உறுதியாகியுள்ள நிலையில், மீதமுள்ள 5 வீரர்கள் குறித்த விவரம் ஏதும் வெளியாகவில்லை. இதனால் இன்றைய போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் யார் விளையாடுவார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
 
20 வீரர்களும், 5 கூடுதல் வீரர்கள் என மொத்தம் 25 பேர் கொண்ட இந்திய அணி, இலங்கை சென்றுள்ள நிலையில், இன்றைய போட்டியில் யார்யார் களம் இறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement