Advertisement

IND vs SL: ஒருநாள் & டி20 தொடருக்கான தேதிகள் மாற்றம்!

இலங்கை அணியை சேர்ந்த இருவருக்கு கரோனா உறுதியானதையடுத்து இந்தியா - இலங்கை இடையேயான கிரிக்கெட் தொடர்களின் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan July 10, 2021 • 14:58 PM
india-sri-lanka-odi-series-to-start-on-july-18-due-to-covid-19-outbreak
india-sri-lanka-odi-series-to-start-on-july-18-due-to-covid-19-outbreak (Image Source: Google)
Advertisement

ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. 

வரும் 13ஆம் தேதி முதல் இந்த தொடர் தொடங்கவிருந்த நிலையில், இலங்கை அணியில் அடுத்தடுத்து 2 பேருக்கு கரோனா உறுதியானதையடுத்து, இத்தொடர் ஜூலை 18ஆம் தேதிக்கு மாற்றப்படுதாக தகவல் வெளியானது. 

Trending


இந்நிலையில் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களின் தேதி அட்டவணை மாற்றப்பட்டு புதிய தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி ஜூலை 18, 20, 23 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும், ஜூலை 25, 27, 29 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் நடக்கவுள்ளன. இத்தகவலை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உறுதி செய்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement