ஐபிஎல் 2021: 129 ரன்களில் சுருண்டது மும்பை !
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 130 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 46ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 7 ரன்களிலும், டி காக் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் மட்டும் நிலைத்து விளையாடி 33 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார்.
Trending
பின்னர் வந்த வீரர்கள் யாரும் சோபிக்காததால் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்களை மட்டுமே சேர்த்தது.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அக்சர் படேல், ஆவேஷ் கான் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் களமிறங்கியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now