Advertisement
Advertisement
Advertisement

ஐபிஎல் 2021: டாஸ் வென்ற எஸ்.ஆர்.எச் அணி பந்துவீச்சு!

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 1

Bharathi Kannan
By Bharathi Kannan April 11, 2021 • 19:11 PM
IPL 2021: David Warner has won the toss and Hyderabad will bowl first
IPL 2021: David Warner has won the toss and Hyderabad will bowl first (Image Source: Google)
Advertisement

இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் திருவிழாவான இந்தியன் பிரீமியர் லீக்கின் 14ஆவது சீசன் தொடங்கி ரசிகர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவருகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைத்ரபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. 

Trending


சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளது. 

இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக அனுபவ சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் அணியில் இடம்பிடித்துள்ளார். இவர் முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கேகேஆர்: சுப்மன் கில், ராகுல் திரிபாதி, நிதீஷ் ராணா, ஈயன் மோர்கன், தினேஷ் கார்த்திக், ஆண்ட்ரே ரஸ்ஸல், ஷகிப் அல் ஹசன், பாட் கம்மின்ஸ், ஹர்பஜன் சிங், பிரதீஷ் கிருஷ்ணா, வருண் சக்ரவர்த்தி.
 
எஸ்.ஆர்.எச்: டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்டோவ், விருத்திமான் சஹா, மனிஷ் பாண்டே, விஜய் சங்கர், முகமது நபி, அப்துல் சமத், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் சர்மா, நடராஜன்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement