Advertisement

அர்ஜுன் டெண்டுல்கர் காயம்; சிமார்ஜீட் சிங் சேர்ப்பு!

மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகியதை அடுத்து, அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் சிமார்ஜீட் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement
IPL 2021: Simarjeet Singh Added To Mumbai Indians Squad As Arjun Tendulkar's Replacement
IPL 2021: Simarjeet Singh Added To Mumbai Indians Squad As Arjun Tendulkar's Replacement (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 29, 2021 • 08:19 PM

14ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டம் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஏற்கெனவே பிளே ஆஃப் வாய்ப்பை உறுதிசெய்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 29, 2021 • 08:19 PM

இதனால் அடுத்த இரண்டு இரடங்களைப் பிடிக்கும் அணிக்கான போட்டிகள் தீவிரமாகியுள்ளன. இதனால் மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 

Trending

இந்நிலையில் இந்த சீசனுக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கரின் மகன், அர்ஜுன் டெண்டுல்கர் இடம்பிடித்திருந்தார். துபாயில் சக அணி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டிருந்த அவர் தற்போது காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளார். 

இதையடுத்து அவருக்கு மாற்று வீரராக இளம் வேகப்பந்து வீச்சாளர் சிமார்ஜீட் சிங் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

தற்போது ஒப்பந்தமாகியுள்ள சிமார்ஜீட் சிங் டெல்லி அணிக்காக முதல் தர போட்டிகளில் விளையாடி 37 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement