Advertisement

ஐபிஎல் 2021: எஸ்ஆர்எச் vs ஆர்ஆர் அணிகளின் உத்தேச பிளேயிங் லெவன்!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 27, 2021 • 15:23 PM
IPL 2021, SRH vs RR Probable XIs
IPL 2021, SRH vs RR Probable XIs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 14வது சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி இன்று துபாயில் நடக்கிறது. சன்ரைசர்ஸ் அணி ஏற்கனவே இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், ராஜஸ்தான் அணிக்கு இது முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தொடர்ச்சியாக திணறிவரும் தொடக்க வீரரும் முன்னாள் கேப்டனுமான டேவிட் வார்னர் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அதிரடி தொடக்க வீரர் ஜேசன் ராய் சேர்க்கப்படலாம். அதேபோல கேதர் ஜாதவுக்கு பதிலாக விராட் சிங் அல்லது பிரியம் கர்க் ஆகிய இருவரில் ஒருவர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்த எவின் லூயிஸ், கிறிஸ் மோரிஸ் மீண்டும் களமிறங்குவர் என கருத்தப்படுகிறது. 

உத்தேச அணி விவரம் 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: ஜேசன் ராய், சஹா, கேன் வில்லியம்சன்(கேப்டன்), மனீஷ் பாண்டே, விராட் சிங்/பிரியம் கர்க், ஜேசன் ஹோல்டர், அப்துல் சமாத், ரஷீத் கான், புவனேஷ்வர் குமார், சந்தீப் ஷர்மா, கலீல் அகமது.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், எவின் லூயிஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், மஹிபால் லமோர், ரியான் பராக், ராகுல் திவேட்டியா, கிறிஸ் மோரிஸ், கார்த்திக் தியாகி, சேத்தன் சக்காரியா, முஸ்தாஃபிசுர் ரஹ்மான்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement