Advertisement

ஐபிஎல் 2022: சொதப்பிய டாப் ஆர்டர்; டெல்லிக்கு எளிய இலக்கு!

ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 116 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan April 20, 2022 • 21:10 PM
IPL 2022: Delhi Capitals restricted Punjab Kings by 115 runs
IPL 2022: Delhi Capitals restricted Punjab Kings by 115 runs (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் (9), மயங்க அகர்வால் (24),ஜானி பேர்ஸ்டோவ் (9), லியாம் லிவிங்ஸ்டோன் (2) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பேரதிர்ச்சி கொடுத்தனர். 

Trending


அதன்பின் ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா - ஷாரூக் கான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

ஒருமுனையில் சிறப்பான ஆடத்தை வெளிப்படுத்திய ஜித்தேஷ் சர்மா 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய ரபாடா, எல்லீஸ் ஆகியோர் குல்தீப் யாதவின் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தனர். 

அவர்களைத் தொடர்ந்து அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷாருக் கான் 12 ரன்களோடு பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த வீரர்களாலும் சரிவர சோபிக்க முடியவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் குல்தீப் யாதவ், லலித் யாதவ், அக்சர் படேல், கலீல் அஹ்மத் ஆகியோர் தாலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement