Advertisement

ஐபிஎல் 2022: பயிற்சியாளர் குழுவை அறிவித்தது ஹைதராபாத்!

ஐபிஎல் 2022 தொடருக்கான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய பயிற்சியாளர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 23, 2021 • 14:56 PM
IPL: Brian Lara And Simon Katich To Join Sunrisers Hyderabad In A Fresh Support Staff
IPL: Brian Lara And Simon Katich To Join Sunrisers Hyderabad In A Fresh Support Staff (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நெருங்கி வரும் நிலையில், அணிகள் தக்க வைத்துக் கொண்ட வீரா்களின் பட்டியல் சமீபத்தில் வெளியானது. 

இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேன் வில்லியம்சன் (ரூ. 14 கோடி), அப்துல் சமத் (ரூ. 4 கோடி), உம்ரான் மாலிக் (ரூ. 4 கோடி) ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளார்கள். 

Trending


டேவிட் வார்னர், ரஷித் கான், பேர்ஸ்டோவ், மனிஷ் பாண்டே போன்ற பிரபல வீரர்களை சன்ரைசர்ஸ் அணி விடுவித்துள்ளது. 

மேலும் 2021 ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணி மோசமாக விளையாடி 14 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டும் பெற்று கடைசி இடம் பிடித்தது. 

இந்நிலையில் ஐபிஎல் 2022 போட்டிக்கான சன்ரைசர்ஸ் அணியின் பயிற்சியாளர் குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 

  • பிரையன் லாரா - திட்டமிடல் & பேட்டிங் பயிற்சியாளர் 
  • டாம் மூடி - தலைமைப் பயிற்சியாளர் 
  • சைமன் கடிச் - உதவிப் பயிற்சியாளர் 
  • முரளிதரன் - திட்டமிடல் & சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளர் 
  • டேல் ஸ்டெய்ன் - வேகப்பந்துவீச்சுப் பயிற்சியாளர் 
  • ஹேமங் பதானி - ஃபீல்டிங் பயிற்சியாளர் & புதிய வீரர்களைக் கண்டுபிடிக்கும் பணி.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement