அயர்லாந்து vs இந்தியா, முதல் டி20 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா - அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி நாளை டப்ளினில் நடைபெறவுள்ளது.
அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் பலருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளை தொடங்கும் இந்த தொடரானது ஆகஸ்ட் 23ஆஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியே இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருப்பதால் இந்த தொடரில் இந்திய அணியின் செயல்பாடு எவ்வாறு இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - அயர்லாந்து vs இந்தியா
- இடம் - டப்ளின்
- நேரம் - இரவு 7.30 மணி (இந்திய நேரப்படி)
போட்டி முன்னோட்டம்
நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அதனை தொடர்ந்து மிடில் ஆர்டரில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாட வாய்ப்புள்ளது. அதனைத்தொடர்ந்து திலக் வர்மா, ரிங்கு சிங் ஆகியோர் இடம் பிடிப்பார்கள்.
பின்பரிசையில் ஆல்ரவுண்டர்களாக ஷிவம் துபே மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரும், பந்துவீச்சாளர்கள் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னாய், பிரசித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியுள்ளதால், இத்தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளது, அதேசமயம் பும்ரா, பிரஷித் கிருஷ்ணா ஆகியோர் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியுள்ளதால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மறுபக்கம் பால் ஸ்டிர்லிங் தலைமையிலான அயர்லாந்து அணியையும் குறைத்து மதிப்பிடமுடியானது. ஏனெனில் சமீப காலங்களில் அயர்லாந்து அணி உலகின் முன்னணி அணியை மண்ணைக் கவ்வவைத்துள்ளது நாம் அறிந்ததே. அதனால் அவர்களும் இத்தொடரில் தங்களது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும்.
ஆயர்லாந்து அணியில் பால் ஸ்டிர்லிங், ஆண்டி பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பேர் போன்ற அதிரடி பேட்டர்களும், ஜார்ஜ் டக்ரெல், மார்க் அதிர், ஜோஷுவா லிட்டில், பேர் மெக்கர்த்தி, பெஞ்சமின் வைட் போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களையும் கொண்டுள்ளதால் நிச்சயம் இத்தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 05
- அயர்லாந்து - 0
- இந்தியா - 05
உத்தேச லெவன்
இந்தியா: ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா, முகேஷ் குமார்.
அயர்லாந்து: ஆண்ட்ரூ பால்பிர்னி, பால் ஸ்டிர்லிங், லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் காம்பர், ஃபியோன் ஹேண்ட், ஜார்ஜ் டோக்ரெல், மார்க் அதிர், பேரி மெக்கார்த்தி, ஜோஷுவா லிட்டில், பெஞ்சமின் வைட்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- கீப்பர் - சஞ்சு சாம்சன்
- பேட்ஸ்மேன்கள் - பால் ஸ்டிர்லிங், ஹாரி டெக்டர் (விசி), ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- ஆல்-ரவுண்டர்கள் - வாஷிங்டன் சுந்தர், கர்டிஸ் கேம்பர்
- பந்துவீச்சாளர்கள் - ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் (கே), ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now