Advertisement

ஜாம்பவன்களை அச்சுறுத்தும் கரோனா; சக வீரர்கள் அதிர்ச்சி!

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட்

Advertisement
Cricket Image for ஜாம்பவன்களை அச்சுறுத்தும் கரோனா; சக வீரர்கள் அதிர்ச்சி!
Cricket Image for ஜாம்பவன்களை அச்சுறுத்தும் கரோனா; சக வீரர்கள் அதிர்ச்சி! (Image Source: instagram)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 30, 2021 • 06:28 PM

சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிரிக்கெட் ஜாம்பவான்களைக் கொண்டு சாலை பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ், இங்கிலாந்து, வங்கதேச பங்களாதேஷ் அணிகள் விளையாடினர். 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 30, 2021 • 06:28 PM

இத்தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய, இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் ஆடிய இந்திய அணி 181 ரன்கள் அடித்தது. பின்னர் விளையாடிய ஸ்ரீலங்கா அணி 167 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் மூலம் தோல்வியை தழுவியது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. 

Trending

இந்நிலையில் பாதுகாப்பாக முறையில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு தொடர் தற்பொழுது இந்திய வீரர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. முதலில் சச்சின் டெண்டுல்கருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை அடுத்து அவருக்கு கரோனா பரிசோதனை நடந்தது. அதில் சச்சின் டெண்டுல்கருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து , அவர் தற்பொழுது தனிமைபடுத்தப்பட்டுள்ளார். 

சச்சின் டெண்டுல்கரை அடுத்து அதே தொடரில் விளையாடிய யூசுப் பதான், தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்ரமணியம் பத்ரிநாத்துக்கும் அடுத்தடுத்து கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து  இவ்விரு வீரர்களும் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்படி இந்திய லெஜண்ட்ஸ் அணியை சேர்ந்த 3 வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது நான்காவதாக இர்பான் பதானுக்கு தொற்று உறுதியாகிவுள்ளது. இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவில், அறிகுறிகள் எதுவும் இல்லாமல் எனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்வது நல்லது. அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement