Advertisement
Advertisement
Advertisement

டி20 உலகக்கோப்பை: இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி!

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் இந்திய அணியை இர்ஃபான் பதான் தேர்வு செய்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 21, 2021 • 12:48 PM
Irfan Pathan names India’s playing XI for Pakistan clash
Irfan Pathan names India’s playing XI for Pakistan clash (Image Source: Google)
Advertisement

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஐசிசி தொடர்களில் மட்டுமே மோதிக்கொள்வதால் அப்போட்டியின் மீதானஎதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கியிருந்த நிலையில், டி20 உலக கோப்பையில் இரு அணிகளும் மோதுகின்றன.

வரும் 23ஆம் தேதி இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இந்த போட்டி குறித்து பலரும் கருத்து கூறிவருகின்றனர். அந்தவகையில், பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் ஆடும் லெவனை முன்னாள் வீரர்கள் பலரும் தேர்வு செய்துவரும் நிலையில், இர்ஃபான் பதானும் தேர்வு செய்துள்ளார்.

Trending


இர்ஃபான் பதானின் அணியில், தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா, ராகுல். 3ஆம் வரிசையில் கோலி, 4ஆம் வரிசையில் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா ஆகியோரையும், சுழற்பந்து வீச்சாளர்களாக ஜடேஜா, வருண் சக்கரவர்த்தி  ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ள இர்ஃபான் பதான்,வேகப்பந்து வீச்சாளர்களாக ஷமி, புவனேஷ்வர் குமார், பும்ரா ஆகிய மூவரையுமே தேர்வு செய்துள்ளார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இர்ஃபான் பதான் தேர்வு செய்த இந்திய அணி: ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஷமி, பும்ரா, வருண் சக்கரவர்த்தி.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement