ஆஷஸ் தொடர்: இரண்டாவது போட்டியிலிருந்து ஹசில்வுட் விலகல்!
இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து காயம் காரணமாக ஹசில்வுட் விலகினார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 16ஆம் தேதி அடிலெய்டில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் காயம் காரணமாக இப்போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹசில்வுட் விலகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது ஹசில்வுட் காயமடைந்தார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அவரது காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதன் காரணமாகவே அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார். மேலும் அவருக்கு மாற்று வீரராக ஜெய் ரிச்சர்ட்சன் இடம்பெறுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now